இறுதியாகப் புதுப்பிக்கப்பட்ட திகதி: மே 29, 2017


அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் https://www.alquranopencollege.com என்ற இணையதளத்தையும் அதன் சேவைகளையும் பாவிப்பதன் மூலம் நீங்கள் கீழ்வரும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்பதாக உறுதி கூறுகிறீர்கள்.

  • எமது இணைய தளத்தில் தகவல்கள் மற்றும் அறிவுருத்தல்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை சரியாகப் படித்து அதற்கேற்ப நடந்து கொள்வது உங்களது பொறுப்பாகும். அதில் தவறுகள் ஏதும் ஏற்படின் அதற்கு அல் குர்ஆன் திறந்த கல்லூரி எவ்வகையிலும் பொறுப்பாகாது.
  • எமது இணைய தளத்தின் சேவைகளைப் பாவிப்பதன் மூலம் எமது இரகசியக் காப்புக் கொள்கை மற்றும் பணத் திரும்பப் பெறல் கொள்கை (Privacy and  Refunds Policies) என்பவற்றுக்கு உடன் படுகிறீர்கள்.
  • நீங்கள் கொள்வனவு செய்யும் சேவையை உபயோகிக்கும் போது
    • உங்களது கொள்வனவு[கள்] (Orders) பல்வேறு காரணங்களால் பொறுத்தமில்லை என்று அறியப்பட்டால் அதை/அவற்றை நீக்கிவிட்டு பணத்தை திருப்பி அளிக்க அல் குர்ஆன் திறந்த கல்லூரிக்கு முழு உரிமை உள்ளது. (உம்: பொருள் இல்லாமை – out of stock)
    • கொள்வனவு (Order) செய்த நாளிலிருந்து இரு கிழமைக்குள் பணம் செலுத்தப்படாத பட்சத்தில் குறித்த கொள்வனவு (Order) ரத்து (Cancel) செய்யப்படும்.
    • சில வேளை கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்கான தபால் செலவினம் எமது இணையத் தளத்தில் தரப்பட்டுள்ளதைவிட குறையும் பட்சத்தில் நீங்கள் செலுத்திய பணத்தில் மேலதிகமான தொகை கல்லூரிக்கு ஸதகாவாக  பெற்றுக் கொள்ளப்படும்.
  • இந்த விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் எந்நேரத்திலும் மாற்றங்கள் செய்யும் உரிமை அல் குர்ஆன் திறந்த கல்லூரிக்கு உள்ளது. அதனடிப்படையில் மாற்றங்கள் ஏதும் செய்தால் அதனை நீங்கள் இங்கு காணலாம்.