எமது இணையதளம் மூலம் கொள்வனவு செய்வது எப்படி

எமது இணையதளம் மூலம் கொள்வனவு செய்வது எப்படி

இப்போது உங்களுக்கு தேவையான புத்தகங்கள், DVDக்களை எமது இணைய தளத்திலிருந்தே நேரடியாக கொள்வனவு செய்ய முடியும். நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் எளிதான சில படிமுறைகளே.

 

படிமுறை 1

முதலில் எமது இணையதளத்தில் காணப்படும் “புத்தகங்கள்/DVD” என்ற இணைப்பில் உங்களுத் தேவையானதைத் தெரிவு செய்யவும்.

கொள்வனவு படிமுறை 1

 


படிமுறை 2

பின்னர் நீங்கள் தெரிவு செய்யும் புத்தகம் அல்லது DVDயின் கீழே உள்ள “+”ஐ கிலிக் செய்யவும். அதனைத் தொடர்ந்து நீங்கள் Cart Pageற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

கொள்வனவு படிமுறை 2


படிமுறை 3

அங்கு உங்களுக்குத் தேவைப்படும் எண்ணிக்கையை “Quantity” என்ற இடத்தில் தெரிவு செய்யவும். தெரிவு செய்த பிறகு “Update cart” என்ற இணைப்பைக் கிலிக் செய்யவும்.

இலங்கை அல்லாத ஏனைய சில நாடுகளில் உள்ளவர்களுக்கும் தபால் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். அதற்கான செலவீனங்களை “Calculate shipping” என்ற இணைப்பை கிலிக் செய்வதன் ஊடாக தெரிந்து கொள்ள முடியும்.

step-3aa

(குறிப்பு: உங்களுக்கு வேறு ஏதும் புத்தகமோ அல்லது DVDயோ தேவைப்படின் படிமுறைகள் 1,2 இன் படி அதனையும் சேர்க்கவும். உதாரணமாக இரு பொருட்களை சேர்த்தால் உங்களது “Cart” கீழ்வருமாறு காணப்படும்.)

(குறிப்பு 2: இப்படி உங்களுக்கு விரும்பிய தொகை* புத்தகங்கள்/DVDக்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.)

பின்னர் அதே “Cart Page”ல் காணப்படும் “Proceed to checkout” என்ற இணைப்பைக் கிலிக் செய்யவும்.

step-3b


படிமுறை 4

“Billing & Shipping”ல் கேட்கப்பட்டுள்ள உங்களது விபரங்கள் அனைத்தையும் நிரப்பவும். ( * )இக்குறியீடு இடப்பட்டுள்ள அனைத்தும் கட்டாயம் நிரப்பப்பட வேண்டியவை.

இங்கு நீங்கள் குறிப்பிடும் பெயர், முகவரிக்கே பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்பதைக் கவனத்திற் கொள்க.

step4


குறிப்பு: மீண்டும் வேறொரு தருணத்தில் எமது இணைய தளத்தில் கொள்வனவு செய்ய உங்களுக்கு உத்தேசமிருந்தால்  “Create an account” என்ற இணைப்பை கிலிக் செய்யவும். நீங்கள் கொள்வனவு செய்து முடித்ததன் பிறகு உங்களுக்கு உங்களுடை Password, ஈமெயிலில் அனுப்பி வைக்கப்படும். இப்படி செய்தால் பின்னர் வேறு கொள்வனவுகள் செய்யும்போது உங்களது விபரங்களை மீண்டும் மீண்டும் நிரப்ப வேண்டி ஏற்படாது.

step-4a

குறிப்பு 2: ஏற்கனவே உங்களுக்கு ஒரு “Account” இருந்தால், Pageன் மேலே காணப்படும் “Returning Customer? Click here to login”  என்ற இணைப்பைப் பாவித்து Log in ஆகவும்.

 


விபரங்களை நிரப்பியதன் பின்னர் “Continue” என்ற இணைப்பைக் கிலிக் செய்யவும்.

step-4c

 


 

படிமுறை 5

இறுதியாக நீங்கள் பணம் செலுத்த விரும்பும் முறையைத் தெரிவு செய்யவும்.

 

 

1. eZ Cash

பணத்தை தொலைபேசி மீள் நிரப்பல் (Reload) செய்யும் கடைகளினூடாக (Communication store) செலுத்துவதற்கு இம்முறையைத் தெரிவு செய்யவும். அல்லது நீங்கள் eZ Cash சேவையைக் கொண்டவரெனில் உங்களது தொலைபேசி மூலம் செலுத்த முடியும்.

2. Direct Bank Transfer

பணத்தை எமது வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு இந்த முறையைத் தெரிவு செய்யவும்.


மேலே தரப்பட்டவற்றில் உங்களுக்குப் பொருத்தமானதைத் தெரிவு செய்யவும். பின்னர் எமது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஆமோதிக்கும் வகையில் அடியில் காணப்படும் “I’ve read and accept the terms & conditions” என்ற இணைப்பைக் கிலிக் செய்யவும். (இதனைக் கிலிக் செய்யாவிடில் உங்களது கொள்வனவு பூரணமாகாது.)

இறுதியாக தரப்பட்டுள்ள அனைத்தையும் உறுதி செய்துவிட்டு “Place order” என்ற இணைப்பைக் கிலிக் செய்யவும். நீங்கள் பணம் செலுத்தத் தெரிவு செய்த முறைமைக்கேற்ப உங்களுக்கு அறிவுருத்தல்கள் வழங்கப்படும். அவற்றை நன்கு வாசித்து அதற்கமைய நடந்து கொள்ளவும்.

 

நன்றி. இத்துடன் உங்களது கொள்வனவு பூரணமாகிறது. எதிர்வரும் சில நாட்களில் பொருட்கள் உங்களது வீட்டையே வந்தடையும். இன்ஷா அல்லாஹ்.

அல் குர்ஆன் திறந்த கல்லூரி, ஒரு திறந்த இஸ்லாமியக் கல்வி நிறுவனமாகும்.