அறிமுகம்

நேரடியாக எமது கல்லூரிக்கு சமூகந் தந்து பாடநெறிகளைக் கற்க முடியாத மாணவர்களுக்கு DVDக்கள், புத்தகங்கள், கையேடுகள் போன்ற கற்றல் உபகரணங்களை தபாலில் அனுப்பி வைப்பதன் மூலம் கற்பதற்கான வாய்ப்பை நாம் வழங்குகின்றோம்.

நீங்கள் எமது பாடநெறிகளை தொலைக் கல்வி முறையில் கற்பதற்கு, எமது பாடநெறிகள் பக்கத்திற்குச் சென்று உங்களுக்கு விருப்பமான பாடநெறியைத் தெரிவு செய்யவும். (தற்போதைக்கு குறிப்பிட்ட சில பாடநெறிகளை மாத்திரமே தொலைக் கல்வி முறையில் கற்க முடியும்.) பின்னர் அங்கு காணப்படும் தொலைக் கல்வி என்ற தலைப்பின் கீழ் உள்ள அறிவுருத்தல்களைப் பின்பற்றவும். அதனைத் தொடர்ந்து உங்களுக்கான கற்றல் உபகரணங்களை* நாம் தபால் மூலம்  அனுப்பி வைப்போம்.

அந்த கற்றல் உபகரணங்களைக் கொண்டு உங்களது நேரத்திற்கேற்ப கற்று முடித்த பின்னர் நீங்கள் சான்றிதழ் பெற விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளவும். பின்னர் உங்களுக்கான பரீட்சை அல் குர்ஆன் திறந்த கல்லூரியிலோ அல்லது முடியுமானால் உங்களது பிராந்தியத்திலோ உங்களுக்குப் பொறுத்தமான திகதியில் ஏற்பாடு செய்யப்படும். அப்பரீட்சையில் நீங்கள் சித்தியடையின் அதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

தொலைக் கல்வி சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்: (காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணிக்குள்) (+94) 77 20 73 709


*கற்றல் உபகரணங்களை முழுமையாக (Full set) அல்லது பகுதி பகுதியாக (sets) பெற முடியும். பகுதி பகுதியாக நீங்கள் பெற விரும்பினால் அதற்கான கட்டணங்களை அந்தந்தப் பகுதிக்கு மாத்திரம் செலுத்த முடியும்.