அல் குர்ஆன் திறந்த கல்லூரி ஒரு கல்விசார் நிறுவனமாகும். அது ஷரீஆ கலைகள் மற்றும் இஸ்லாமிய சமூகவியல் கலைகள் சார்ந்த பாடநெறிகளை வழங்குகின்றது. பாடசாலை மாணவர்களுக்கும் கல்விமான்களுக்கும் பொது மக்களுக்கும் பொருந்தும் வகையில் பிரத்தியேகமான பாடநெறிகளை நாம் தயார்படுத்தியுள்ளோம். இப்பாடநெறிகள் நவீக காலத்திற்குப் பொருந்தக் கூடியவகையிலும் நவீன உலக சிந்தனைச் சவால்களை எதிர் கொள்ளக் கூடிய மாணவர்களை உருவாக்கும் வகையிலும் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

எமது கற்றல், கற்பித்தல் செயற்பாட்டு முறைமைகள்:

  • முதல் வகை: இது குறிப்பு எடுத்தல், பரீட்சை எழுதுதல்  என்பவையற்ற கற்றல், கற்பித்தல் முறைமையாகும். இஸ்லாம் பற்றி தமக்கிருக்கின்ற பொதுவான அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகின்ற எவரும் இவ்வகை வகுப்புகளில் இணைந்து கொள்ள முடியும். இது இஸ்லாமிய கற்கை நெறிகளை ஆழ்ந்து கற்க ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்.
  • இரண்டாம் வகை: இது குறிப்பு எடுத்தல், பரீட்சை எழுதல் என்பவை கட்டாயப்படுத்தப்பட்ட கற்றல், கற்பித்தல் முறைமையாகும்.  இஸ்லாம், அது சார்ந்த கலைகள் பற்றிய ஆழ்ந்த அறிவை இது மாணவர்களுக்கு அளிக்கும்.
  • மூன்றாம் வகை: தொலைக்கல்வி. இது மேலே குறிப்பிடப்பட்ட இருவகை கல்வியையும் தொலைகல்வியினூடாக தனியாகக் கற்றலாகும்.